ஆயுதங்களை பரிசோதனை செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது - ஐ.நா.வில் வடகொரியா தகவல்


ஆயுதங்களை பரிசோதனை செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது - ஐ.நா.வில் வடகொரியா தகவல்
x
தினத்தந்தி 28 Sep 2021 12:14 AM GMT (Updated: 28 Sep 2021 12:14 AM GMT)

ஆயுதங்களை பரிசோதனை செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது என்று ஐ.நா. சபையில் வடகொரிய தூதர் தெரிவித்தார்.

நியூயார்க்,

ஐ.நா. சபையின் 76-வது பொதுக்கூட்டம் கடந்த 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஐ.நா. பொதுசபையில் உரையாற்றியுள்ளனர்.

இந்நிலையில், ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் வடகொரியா சார்பில் அந்நாட்டு தூதர் கிம் சாங் பகேற்றார். 

அப்போது அவர் பேசியதாகவது, அணு ஆயுதம் கொண்ட நாடு ஆயுதங்களை பரிசோதிக்க உரிமை உள்ளது. அதை யாராலும் மறுக்க முடியாது. எங்களை நாங்கள் பாதுகாத்துக்கொள்வதற்காகவும், நாட்டில் அமைதி மற்றூம் பாதுகாப்பு நிலவவும் எங்கள் தேசிய பாதுகாப்பு நலனுக்காக இந்த நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துவருகிறோம்’ என்றார்.

Next Story