கொரோனா பாதிப்பு; ஜப்பானில் தனிமைப்படுத்தும் காலம் 10 நாட்களாக குறைப்பு


கொரோனா பாதிப்பு; ஜப்பானில் தனிமைப்படுத்தும் காலம் 10 நாட்களாக குறைப்பு
x
தினத்தந்தி 28 Sep 2021 7:43 AM GMT (Updated: 28 Sep 2021 7:43 AM GMT)

ஜப்பானில் கொரோனா பாதிப்புக்கு தனிமைப்படுத்தும் காலம் 10 நாட்களாக குறைக்கப்பட உள்ளது.


டோக்கியோ,

ஜப்பானில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களை 14 நாட்கள் வரை தனிமைப்படுத்துவது என அரசு முடிவு செய்து அமல்படுத்தியிருந்தது.  இவற்றில் இந்தியா உள்பட அதிக ஆபத்துள்ள 40 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 3 நாட்கள் அரசுக்குரிய இடங்களில் தங்க வைப்பது உள்பட மொத்தம் தனிமைப்படுத்தும் காலம் 14 நாட்கள் ஆகும்.  இந்த நிலையில், நாட்களின் எண்ணிக்கையை அரசு குறைத்து உள்ளது.

இதுபற்றி அந்நாட்டின் தலைமை அமைச்சரவை செயலாளர் கத்சுனோபு கட்டோ கூறும்போது, வருகிற அக்டோபர் 1ந்தேதியில் இருந்து, கொரோனா பாதிப்புக்கு தனிமைப்படுத்தும் காலம் 14 நாட்களில் இருந்து 10 நாட்களாக குறைக்கப்பட உள்ளது என கூறியுள்ளார்.


Next Story