மெக்சிகோ வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 Sep 2021 2:01 AM GMT (Updated: 29 Sep 2021 2:01 AM GMT)

மெக்சிகோ வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் நடத்திய சந்திப்பில் இரு தரப்பு ஒத்துழைப்பு பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

மெக்சிகோ சிட்டி, 

மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக மெக்சிகோ சென்றுள்ளார். வட அமெரிக்க நாடு ஒன்றுக்கு அவர் சென்றிருப்பது இதுவே முதல் முறை. அது மட்டுமின்றி 41 ஆண்டுகளில் இந்திய வெளியுறவு மந்திரி ஒருவர் அங்கு போய் இருப்பதுவும் இதுவே முதல் முறை ஆகும்.

மெக்சிகோ சிட்டியில் அவர் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி மார்செலோ எப்ரார்ட் கசாபனை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் விண்வெளி உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அவர்கள் ஆராய்ந்தனர். இரு தரப்பும் சர்வதேச மன்றங்களில் நெருங்கிப் பணியாற்ற வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டனர்.

Next Story