ரஷிய அதிபர் புதின் - துருக்கி அதிபர் எர்டோகன் சந்திப்பு


ரஷிய அதிபர் புதின் - துருக்கி அதிபர் எர்டோகன் சந்திப்பு
x
தினத்தந்தி 29 Sep 2021 7:29 PM GMT (Updated: 29 Sep 2021 7:29 PM GMT)

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை துருக்கு அதிபர் தாயூப் எர்டோகன் சந்தித்தார்.

மாஸ்கோ,

சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற சிரிய அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

இந்த உள்நாட்டு போரில் சிரிய அரசுப்படையினருக்கு ரஷியா உதவி செய்து வருகிறது. அதேவேளை கிளர்ச்சியாளர்கள் குழுக்களுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை துருக்கி அளித்து வருகிறது.

 இதனால், ரஷியா-துருக்கி இடையே கருத்து ரீதியிலான மோதல்கள் அவ்வப்போது எழுந்து வருகிறது. அதேவேளை அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி எஸ்-400 ரக ஏவுகணை தடுப்பு ஆயுதங்களை ரஷியாவிடம் இருந்து துருக்கி வாங்கியுள்ளது. இதனால், துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்க திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை துருக்கி அதிபர் தாயூப் எர்டோகன் நேற்று சந்தித்தார். ரஷியாவின் சோட்ஷி நகரில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருதல், எஸ்-400 ரக ஏவுகணை தடுப்பு ஆயுதம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

Next Story