உலக செய்திகள்

பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஆற்றுக்குள் விழுந்த கார் - ஒரேகுடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி + "||" + 7 killed in road mishap in Pakistan

பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஆற்றுக்குள் விழுந்த கார் - ஒரேகுடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி

பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஆற்றுக்குள் விழுந்த கார் - ஒரேகுடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
பாகிஸ்தானில் கார் பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
லாகூர்,

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். 4 பெண்கள், 2 குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் அந்த காரில் பயணம் செய்துள்ளனர்.

இரவு நேரத்தில் பாலத்தில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்திற்கு கீழே உள்ள ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

இரவு நேரம் என்பதால் இந்த விபத்து குறித்து யாருக்கும் தெரியவில்லை. மறுநாளான நேற்று ஆற்றில் கார் ஒன்று அடித்து செல்லப்படுவது குறித்து மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, மீட்புக்குழுவினர் காரை மீட்டனர். 

ஆனால், ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த ஒரேகுடும்பத்தை சேர்ந்த 7 பேரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை வென்றது மறக்கமுடியாதது: ஷாஹீன் அப்ரிடி
கே.எல்.ராகுலுக்கு பந்து வீசியபோது, அது சிறந்த பந்தாக இருக்கும் என்று நான் கூட எதிர்பார்க்கவில்லை.
2. பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக பெண் நீதிபதியாக பதவியேற்றார் ஆயிஷா மாலிக்!
பாகிஸ்தான் நாட்டின் சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதியாக பதவியேற்றார் ஆயிஷா மாலிக்.
3. காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பறந்து வந்த பலூன்
ல்லை தாண்டும் அத்துமீறலில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் பாகிஸ்தான், இதுபோன்று தங்கள் நாட்டு கொடியுடன் இந்திய பகுதிக்குள் பலூன்களை அனுப்புவது வழக்கமாக உள்ளது
4. பாகிஸ்தானில் மோர்டார் குண்டுகள் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள முகாம் ஒன்றில் பழைய மோர்டார் ரக குண்டுகள் திடீரென வெடித்து சிதறியது.
5. பாகிஸ்தான்: நபிகள் குறித்து அவதூறு பரப்பிய பெண்ணுக்கு மரண தண்டனை
பாகிஸ்தானில் தனது தோழிக்கு நபிகள் பற்றிய அவதூறான கேலிச்சித்திரங்களை அனுப்பிய பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.