உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கு ஆதரவாக பிரம்மாண்ட பொதுக்கூட்டம் + "||" + Thousand People Attend Rally Outside Kabul To Show Support For Taliban

ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கு ஆதரவாக பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கு ஆதரவாக பிரம்மாண்ட பொதுக்கூட்டம்
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியபிறகு அங்கு இதுபோன்ற ஒரு கூட்டம் நடப்பது இதுவே முதல் முறையாகும்.
காபூல், 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க தலைமையிலான படைகள் வெளியேறியதும், அந்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றினர். தலீபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு இடம் இல்லாத அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. 

அதுபோக, பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், தலீபான்கள் ஆட்சிக்கு பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.  மேலும், பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் அங்குள்ள மகளிர் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தலீபான்கள் ஆட்சிக்கு எதிராக மக்கள் அச்சத்துடன் இருப்பதாக சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. 

இந்த நிலையில், தலீபான்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காபூலில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலீபான்கள் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆண்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.  காபூலில் உள்ள மலைப்பகுதிகள்  நிறைந்த இடமான கோடாமன் நகரத்தில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில், தலீபான்களின்  முன்னணி தலைவர்கள் உரையாற்றினர். 

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியபிறகு அங்கு இதுபோன்ற ஒரு கூட்டம் நடப்பது இதுவே முதல் முறையாகும்.  பொதுக்கூட்டத்தை நடைபெற்ற இடத்தை சுற்றி தலீபான் படையினர் ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்திய படி நின்று கொண்டிருந்தனர். அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டது என்ற கோஷங்கள் அடங்கிய பாடல்களும் கூட்டத்தில் ஒலிரபரப்பப்பட்டன. 

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் 4.3 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இன்று ரிக்டர் 4.3 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
2. புகழ்பெற்ற பச்சைக் கண்கள் ஆப்கான் அகதி பெண் இத்தாலியில் தஞ்சம்
ஷர்பத் குல்லா 1984 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அகதிப் பெண்ணாக சர்வதேசப் புகழ் பெற்றார்.
3. ஆப்கானிஸ்தான்: தலீபான்களின் 100 நாட்கள் ஆட்சி எப்படி உள்ளது...?
அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு, வேலையில்லாத் திண்டாட்டத்தால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
4. ஆப்கானிஸ்தானில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் சரண்
ஆப்கானிஸ்தானில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைந்தனர்.
5. ஆப்கானிஸ்தானில் டி.வி. நிகழ்ச்சிகளில் தோன்ற பெண்களுக்கு தடை...! தலீபான்கள் உத்தரவு
ஆப்கானிஸ்தானில் டி.வி. நிகழ்ச்சிகளில் பெண்கள் தோன்ற தடை விதித்து தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.