உலக செய்திகள்

பாகிஸ்தான்: மேம்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து விபத்து - 7 பேர் பலி + "||" + Road accident leaves Seven killed, 28 injured in Pakistan's Punjab

பாகிஸ்தான்: மேம்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து விபத்து - 7 பேர் பலி

பாகிஸ்தான்: மேம்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து விபத்து - 7  பேர் பலி
பாகிஸ்தானில் மேம்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
லாகூர், 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் கிழக்கு சக்வால் மாவட்டத்தில் கராச்சி நோக்கி நேற்று இரவு ஒரு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

பஞ்சாப் மாகாணத்தின் கான்வால் மாவட்டத்தில் உள்ள மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது பஸ்சின் டயர் திடீரென வெடித்தது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மேம்பாலத்தில் இருந்து கீழே கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 28 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. இரட்டை நிலைப்பாட்டை கைவிட வேண்டும்; பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா சம்மன்
மும்பை தாக்குதலின் 13-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
2. காற்று மாசு எதிரொலி;பாகிஸ்தானில் வரும் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகள் மூடல்!
உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நகரமாக பாகிஸ்தானின் லாகூர் உள்ளது குறிப்பிடத்தக்கது
3. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டதில் 2 போலீசார் பலி
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டதில் 2 போலீசார் பலியாகினர்.
4. பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 6 பேர் பலி; திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது சோகம்
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
5. பாகிஸ்தான் கோர்ட்டில் ஆளும் கட்சி பெண் தலைவரை அடித்து, உதைத்த வக்கீல்கள்
பாகிஸ்தான் கோர்ட்டில் ஆளும் கட்சி பெண் தலைவரை அங்கிருந்த வக்கீல்கள் அடித்து, உதைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.