இந்தோனேசியா: பாலி தீவிலிருந்து விமானபோக்குவரத்து மீண்டும் தொடக்கம்
இந்தோனேசியாவில் பாலி தீவிலிருந்து அக்டோபர் 14 ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது.
ஜகார்த்தா,
கொரோனா தொற்றுநோய் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டிருந்த சர்வதேச விமான சேவை, அக்டோபர் 14 ஆம் தேதி முதல் பாலி தீவில் உள்ள விமான நிலையத்தில் மீண்டும் திறக்க இந்தோனேசியா அரசு திட்டமிட்டுள்ளது.
உலகின் நான்காவது அதிக மக்கள்தொகை கொண்ட இந்தோனேசியாவில் கொரோனா தொற்றானது ஜூலை மாதத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போது பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால் மீண்டும் விமான போக்குவரத்தை தொடங்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
விமானத்தில் பயணம் செய்யும் வெளிநாட்டு பயணிகள் கட்டாயம் எட்டு நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story