உலக செய்திகள்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு; 4 பேர் காயம் + "||" + Shooting at an American school; 4 people were injured

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு; 4 பேர் காயம்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு; 4 பேர் காயம்
அமெரிக்க பள்ளி கூடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் காயமடைந்து உள்ளனர்.
வாஷிங்டன்,


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஆர்லிங்டனில் உள்ள டிம்பர்வியூ உயர்நிலை பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் காயம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின்  விவரங்கள் குறித்து போலீசார் தெரிவிக்கவில்லை.  பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   குழந்தைகளை மீட்பதற்காக பெற்றோர்கள் பள்ளி வளாகம் அருகே குவிந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்களில் 3 பேர் மாணவர்கள் ஆவர்.  வயது முதிர்ந்த ஒருவர் ஆசிரியராக இருக்கலாம் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த தாக்குதலில் கர்ப்பிணி ஆசிரியர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டு உள்ளது.  எனினும், சம்பவ பகுதியிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் 18 வயதுடைய நபர் என கண்டறியப்பட்டு உள்ளது.  திமோதி ஜார்ஜ் சிம்ப்கின்ஸ் என்ற அந்த நபர் தாக்குதல் நடத்தி விட்டு வாகனத்தில் தப்பி சென்றுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  அவரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. உத்தர பிரதேசத்தில் கட்டிட சுவர் இடிந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
உத்தர பிரதேசத்தில் கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.
2. உத்தரகாண்டில் சாலை விபத்து; 11 பேர் உயிரிழப்பு
உத்தரகாண்டில் நடந்த சாலை விபத்தில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர்.
3. பனாமாவில் நைட் கிளப்பில் துப்பாக்கி சூடு; 5 பேர் பலி
பனாமா நாட்டில் நைட் கிளப்பில் 2 கும்பல்களுக்கு இடையேயான துப்பாக்கி சூட்டில் இன்று 5 பேர் பலியானார்கள்.
4. காஷ்மீரில் சாலை விபத்து; 8 பேர் உயிரிழப்பு
காஷ்மீரில் ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.
5. பாகிஸ்தானில் பெட்ரோல் பம்பில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; 9 பேர் பலி
பாகிஸ்தானில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.