அப்துல்ரசாக் குருனாவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு


அப்துல்ரசாக் குருனாவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Oct 2021 11:13 AM GMT (Updated: 7 Oct 2021 11:23 AM GMT)

இலக்கியத்திற்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு அப்துல் ரசாக் குருனாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாக்ஹோம்,

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்கிற சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

2021-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு எழுத்தாளர் அப்துல் ரசாக் குருனாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.   அகதிகள் பிரச்சினை, காலனி ஆதிக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான எழுத்துக்காக பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

21 வயதில் இருந்து எழுதி வரும் அப்துல் ரசாக் குருனா, பல நாவல்களை எழுதி உள்ளார்.  தான்சானியா நாட்டை சேர்ந்த அப்துல் ரசாக் குருனா தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். 

Next Story