உலக செய்திகள்

சீனாவில் புதிதாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Corona confirmed for 25 new people in China

சீனாவில் புதிதாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சீனாவில் புதிதாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சீனாவில் கடந்த ஒரிரு மாதங்களாக தினசரி கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
பீஜிங்,

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

இந்த சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியது. கடந்த ஒரிரு மாதங்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சீன சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சீனாவில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. அந்த வகையில் நேற்று 11 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இதுவரை கொரோனாவால் 4,636 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 96,335 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. திருவையாறு, பேராவூரணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா
திருவையாறு, பேராவூரணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், அசோக்குமார் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புவனகிரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழிதேவனுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
2. 11 மாவட்டங்களில் 22 பேர் உயிரிழப்பு; 23 ஆயிரத்து 975 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நேற்று 23 ஆயிரத்து 975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 மாவட்டங்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
3. கேரளாவில் 18 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது
4. பெய்ஜிங்கில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு: கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்திய சீனா
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
5. மெட்ரோ ரெயில் கட்டிட தொழிலாளர்கள் 26 பேருக்கு கொரோனா
பூந்தமல்லி அருகே மெட்ரோ ரெயில் கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆவடி மாநகராட்சி ஊழியர்கள் 9 பேரும் பாதிக்கப்பட்டனர்.