உலக செய்திகள்

விண்ணில் இருந்து பூமியை ரசிக்கும் பறக்கும் பலூன் சுற்றுலா + "||" + Space tourism firm will offer the first commercial flights to the stratosphere by 2024

விண்ணில் இருந்து பூமியை ரசிக்கும் பறக்கும் பலூன் சுற்றுலா

விண்ணில் இருந்து பூமியை ரசிக்கும் பறக்கும் பலூன் சுற்றுலா
குறைந்த கட்டணத்தில் விண்ணில் இருந்து பூமியை ரசிக்கும் பறக்கும் பலூன் சுற்றுலா திட்டத்தை வேர்ல்டு வியூ நிறுவனம் தொடங்கி உள்ளது.
வாஷிங்டன்

அமெரிக்காவின் அரிசோனாவை தளமாகக் கொண்ட வேர்ல்டு வியூ (World View) என்னும் நிறுவனம், சுற்றுசூழலுக்கு உகந்த முறையில் பலூன் தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளர்களை விண்வெளி  சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது.

வெப்ப காற்றில் இயங்கும் பலூனை போல் இல்லாமல், ஹீலியம் வாயுவை பயன்படுத்தி பலூனை மெல்ல மெல்ல பல ஆயிரம் அடி உயரத்துக்கு பறக்கவிட திட்டமிடப்பட்டுள்ளது.

2024 ஆம் அண்டு முதல் தொடங்கும் சுற்றுலா சேவையில் முற்கட்டமாக சீன பெருஞ்சுவர், எகிப்து பிரமிட், அமேசான் காடுகள் உள்ளிட்ட இடங்களை விண்ணிலிருந்து பார்க்கும் வகையில் பயணங்கள் ஏற்பாடு செய்யவேர்ல்டு வியூ திட்டமிட்டுள்ளது.

இந்த பயணம்  ஆறு முதல் எட்டு மணி நேரம் நீடிக்கும் மற்றும் பயணிகளை குறைந்தது 100,000 அடி (30,000 மீட்டர்) உயரத்திற்கு அழைத்துச் செல்லும்.

வெர்ஜின் கெலக்டிக் (Virgin Galactic) , புளு ஆரிஜின் (Blue Origin) போன்ற நிறுவனங்கள் விண்வெளி சுற்றுலா செல்ல 2 லட்சம் அமெரிக்க டாலர் வசூலிக்கும் நிலையில், பலூனில் சென்று பார்க்க வேர்ல்டு வியூ  நிறுவனம் 50 ஆயிரம் டாலர் நிர்ணயத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒமைக்ரான் பாதிப்பு: அமெரிக்காவில் சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தீவிரம்
ஒமைக்ரான் பாதிப்பின் எதிரொலியாக அமெரிக்காவில் சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
2. ஜெர்மனி, டென்மார்க் நாடுகளுக்கு செல்ல அமெரிக்கா தடை..!
கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து ஜெர்மனி மற்றும் டென்மார்க் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
3. 25 கார்கள்....! 80 கொள்ளையர்கள்...! 60 வினாடிகள்..! வந்தார்கள் எடுத்தார்கள் சென்றார்கள்
சனிக்கிழமை இரவு 25 கார்களில் முகமூடி அணிந்த 80 நபர்கள் வந்துள்ளனர். கைகளில் ஆயுதங்களுடன் நார்ட்ஸ்ட்ரோம் அங்காடிக்குள் நுழைந்த அவர்கள், கைகளில் கிடைத்த பொருட்களை எல்லாம் கொள்ளையடித்தனர்.
4. 18 வயதான அனைவருக்கும் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி; அமெரிக்கா செலுத்த தொடங்கியது
18 வயதான அனைவருக்கும் கொரோனாவுக்கு எதிராக ‘பூஸ்டர் டோஸ் ’தடுப்பூசி போடும் பணியை அமெரிக்கா தொடங்கிவிட்டது.
5. நிலவு சுற்றுப்பாதையில் இந்திய-அமெரிக்க விண்கலங்கள் மோதல் தவிர்ப்பு - விஞ்ஞானிகளின் துரித நடவடிக்கை
நிலவு சுற்றுப்பாதையில் இந்திய-அமெரிக்க விண்கலங்கள் ஒன்றோடு ஒன்று மோத இருந்த நிகழ்வை விஞ்ஞானிகள் துரிதமான நடவடிக்கை மூலம் தடுத்து உள்ளனர்.