ஜிம்பாப்வேயில் தங்க சுரங்கத்தில் பயங்கர வெடிவிபத்து


ஜிம்பாப்வேயில் தங்க சுரங்கத்தில் பயங்கர வெடிவிபத்து
x
தினத்தந்தி 9 Oct 2021 5:45 PM GMT (Updated: 9 Oct 2021 5:45 PM GMT)

ஜிம்பாப்வேயில் தங்க சுரங்கத்தில் கியாஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின.7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ஹராரே,

தென்ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மாஷோலாந்து மாகாணத்தின் மசோவ் நகரில் தங்க சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சீனா உள்பட வெளிநாடுகளை சேர்ந்த பலரும், ஏராளமான உள்ளூர் மக்களும் வேலை பார்த்து வந்தனர்.இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை இந்த தங்க சுரங்கத்தில் வழக்கம் போல் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. தொழிலாளர்கள் அனைவரும் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சற்றும் எதிர்பாராத வகையில் சுரங்கத்தில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதை தொடர்ந்து சுரங்கம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் சீனர்கள் 5 பேர் மற்றும் ஜிம்பாப்வேயை சேர்ந்த இருவர் என மொத்தம் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.


Next Story