உலக செய்திகள்

அங்கோலா நாட்டில் தங்க சுரங்கத்தில் விபத்து; 11 பேர் பலி + "||" + 11 die in illegal gold mining in angolas huambo province

அங்கோலா நாட்டில் தங்க சுரங்கத்தில் விபத்து; 11 பேர் பலி

அங்கோலா நாட்டில் தங்க சுரங்கத்தில் விபத்து; 11 பேர் பலி
அங்கோலா நாட்டின் ஹம்போ மாகாணத்தில் உள்ள தங்க சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 11 பேர் உயிரிழந்தனர்.
ஹம்போ,

அங்கோலா நாட்டின்  ஹம்போ மாகாணத்தில் சட்டவிரோதமாக தங்க சுரங்கங்களில் பணியாற்றுவதால்  ஏற்படும் விபத்துகளில் கடந்த மூன்று மாதங்களில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.அந்த பகுதியின் உள்ளூர் காவல்துறை இந்த தகவலை நேற்று நிருபர்களுக்கு தெரிவித்தது.

ஹம்போ மாகாணத்துக்கான தேசிய காவல்துறையின் ஆணையர் பிரான்சிஸ்கோ ரிபாஸ் நிருபர்களிடம் பேசுகையில், ‘அங்கோலா நாட்டின் பைலுண்டோ, உகுமா, சின்சென்ஜ், லாங்கோன்ஜோ, காலா, ஷிகாலா, சோலோஹங்கா மற்றும் ஹம்போ ஆகிய மாகாணங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.அங்கோலா நாட்டிலுள்ள இந்த பகுதிகளில் அதிக அளவில் கைவினை தங்க சுரங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
சுமார் 2000 சுரங்க தொழிலாளர்கள் சட்டவிரோதமாக தங்க சுரங்கங்களில் பணியாற்றுகின்றனர்’. இவ்வாறு தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில் ஹம்போ மாகாணத்தின் தேசிய காவல்துறை,உள்ளூர் மக்கள் சட்டவிரோதமாக சுரங்க பணியில் ஈடுபடுவதை தடுக்கும் முயற்சிகளில் இறங்கி உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. நெல்லையில் விபத்து; மருத்துவக்கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் பலி
நெல்லையில் கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
2. லாரி மீது கார் மோதி விபத்து: திருமணமான மறுநாள் புதுமாப்பிள்ளை பலி
லாரி மீது கார் மோதிய விபத்தில் திருமணமான மறுநாள் புதுமாப்பிள்ளை பலியானார். மனைவி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. குஜராத்: வேன்-டேங்கர் லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வேன்-டேங்கர் லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்தனர்.
4. ஈரோடு அருகே சாலை விபத்தில் 4 பெண்கள் உள்பட 5 பேர் பலி
சிவகிரி அருகே லாரியும் மாருதி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
5. மலேசிய ராணுவ விமானம் பயிற்சியின்போது விபத்து - விமானப்படை அதிகாரி உயிரிழப்பு
மலேசியாவில் பயிற்சியின்போது ராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் விமானப்படை அதிகாரி உயிரிழந்தார்.