நேபாளத்தில் புதிதாக பதவி ஏற்ற தொழில் துறை மந்திரி 3 நாட்களில் ராஜினாமா


நேபாளத்தில் புதிதாக பதவி ஏற்ற தொழில் துறை மந்திரி 3 நாட்களில் ராஜினாமா
x
தினத்தந்தி 10 Oct 2021 1:05 PM GMT (Updated: 10 Oct 2021 1:05 PM GMT)

நேபாளத்தில் புதிதாக பதவி ஏற்ற தொழில் துறை மந்திரி பதவி ஏற்று 3 நாட்களில் ராஜினாமா செய்து உள்ளார்.

காத்மண்டு,

நேபாளம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கஜேந்திர பகதூர் ஹமால் என்பவர் 3 நாட்களுக்கு முன்பு அந்த நாட்டின் தொழில் துறை மந்திரியாக பதவி ஏற்றார். நேபாள சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ராணாவின் உறவினரான இவர் மந்திரியாக நியமிக்கப்பட்டதற்கு சொந்த கட்சியிலிருந்தே எதிர்ப்பு கிளம்பியது.

மேலும், தலைமை நீதிபதியின் வலியுறுத்தலால் ஹமால் மந்திரியாக நியமிக்கப்பட்டதாகவும் கருத்துகள் வெளியாகின. இந்த நிலையில் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை நேபாள பிரதமர் தெயுபாவிற்கு அளித்த அவர், தன்னுடைய விருப்பத்தின்படியே ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.

Next Story