ஹவாய் தீவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 Oct 2021 12:30 AM GMT (Updated: 11 Oct 2021 12:30 AM GMT)

ஹவாயிலுள்ள கடற்கரை பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஹிலோ, 

ஹவாயின் தீவிலுள்ள கடற்கரை பகுதியில் நேற்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.  6.2  ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிங்கள் குலுங்கின. இதனால் அப்பகுதியின் வீட்டிலுள்ள பொருட்கள் தானாக கீழே விழுந்தன. 

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கொடுத்த தகவலின் படி, முதல் நிலநடுக்கம் நாலேஹுவுக்கு தெற்கே 17 மைல் தொலைவில் 6.1 ரிக்டர் அளவிலும், பின்னர் சுமார் 20 நிமிடங்கள் கழித்து அதே பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் இரண்டாவதாகவும்  நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. முதற்கட்ட தகவலின் படி எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

Next Story