உலக செய்திகள்

ஐ.நா. பொதுச்செயலாளர் தலீபான்களுக்கு வேண்டுகோள் + "||" + UN chief calls on taliban to keep promises to observe rights of women

ஐ.நா. பொதுச்செயலாளர் தலீபான்களுக்கு வேண்டுகோள்

ஐ.நா. பொதுச்செயலாளர் தலீபான்களுக்கு வேண்டுகோள்
ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை கடைபிடிக்குமாறு தலீபான்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நியூயார்க்,

ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸ் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை கடைபிடிக்குமாறு  தலீபான்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.தலீபான்கள் அவர்கள் அளித்த வாக்குறுதியை கடைபிடிக்க வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்.


அவர் தெரிவித்துள்ள செய்தியில், தலீபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்,  பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர், முன்னாள் அரசு அலுவலகர்கள் உள்ளிட்ட ஆப்கன் குடிமக்களிடம் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தனர். அந்த வாக்குறுதிகளை கடைபிடிக்குமாறு தலீபான்களிடம் கடுமையாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

அவர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மேலும், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டம் ஆகியவற்றின் கீழ் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கு ஆதரவாக பிரம்மாண்ட பொதுக்கூட்டம்
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியபிறகு அங்கு இதுபோன்ற ஒரு கூட்டம் நடப்பது இதுவே முதல் முறையாகும்.
2. ஆப்கானிஸ்தானில் முகச் சவரம் செய்ய தடை மீறினால் தண்டனை - தலீபான்கள் அறிவிப்பு
முகச் சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என தலீபான்கள் தெரிவித்து உள்ளனர்.
3. ஐ.நா.சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
ஐ.நா.சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்தது. அந்த நாடு தீ வைத்துக்கொண்டே தீயணைப்பு வீரர் போல வேஷமிடுகிறது என இந்தியா கூறியது.
4. “நான் பள்ளிக்கு செல்ல வேண்டும்” - ஆப்கான் சிறுமியின் ஆவேச பேச்சு: வீடியோ வைரல்
சாப்பிட்டு தூங்கி வீட்டிலேயே முடங்கி கிடக்க பிறக்கவில்லை என்று தலீபான்களுக்கு எதிரான ஆப்கான் சிறுமியின் ஆவேசமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
5. ஆப்கானிஸ்தானில் தலீபான் தலைவர்களுக்கு இடையே மோதல் ; அதிபர் மாளிகையில் குழப்பம்
ஆப்கானிஸ்தான் புதிய இடைக்கால மந்திரி சபையில் பெண்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை. தலீபான்களின் மூத்த தலைவர்களுக்கு இடமளிக்கப்பட்டது.