உலக செய்திகள்

பாதுகாப்பான உலகத்தை உருவாக்க உறுதி ஏற்போம் - ஐ.நா. சபை பொதுச்செயலாளர் + "||" + We are committed to creating a safer world - UN General Secretary of the Council

பாதுகாப்பான உலகத்தை உருவாக்க உறுதி ஏற்போம் - ஐ.நா. சபை பொதுச்செயலாளர்

பாதுகாப்பான உலகத்தை உருவாக்க உறுதி ஏற்போம் - ஐ.நா. சபை பொதுச்செயலாளர்
பாதுகாப்பான மற்றும் நெகிழ்ச்சியான உலகத்தை உருவாக்க உறுதி ஏற்போம் என ஐநா சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
நியூயார்க்,

இன்று அக்டோபர் 13, சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது. வளரும் நாடுகளின் பேரிடர் அபாயம் மற்றும் பேரிடர் இழப்புகளைக் குறைப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பு என்ற கருத்தை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினத்தில் உலக நாடுகள் எடுக்க வேண்டிய உறுதி குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர், பேரிடர் ஆபத்துகளான புயல் அல்லது வெப்ப அலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பை 24 மணிநேர முன்னதாக அறிவிக்கும் பொழுது 30 சதவீத சேதத்தைக் குறைக்க முடியும். ஆனால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட பல நாடுகளில் இன்னும் போதுமான முன்னெச்சரிக்கை அமைப்புகள் இல்லை என தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர், பேரிடர் அபாயக் குறைப்புக்கான சர்வதேச தினமான இன்று, பாதுகாப்பான மற்றும் நெகிழ்ச்சியான உலகத்தை உருவாக்க உறுதியேற்போம் என பதிவிட்டு உள்ளார்.