சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினம் - அக்டோபர் 13


சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினம் - அக்டோபர் 13
x
தினத்தந்தி 13 Oct 2021 5:57 AM GMT (Updated: 13 Oct 2021 5:57 AM GMT)

இன்று அக்டோபர் 13, சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

உலகளாவிய பேரிடர் விழிப்புணர்வு மற்றும் பேரிடர் குறைப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக, பேரிடர் அபாய குறைப்புக்கான சர்வதேச தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் 1989-ல் தொடங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13-ந் தேதி சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

பேரிடர் மேலாண்மையின் அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளில், மக்கள் எவ்வாறு பங்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே பேரிடர் அபாய குறைப்பு தினத்தின் நோக்கமாகும்.

இந்த ஆண்டின் கருப்பொருள் "வளரும் நாடுகளின் பேரிடர் அபாயம் மற்றும் பேரிடர் இழப்புகளைக் குறைப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பு" ஆகும். பருவநிலை மாற்றத்தை எதிர்ப்பதற்கான 2015 பாரிஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் இந்த கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. 

காலநிலை மாற்றம் குறித்த நடவடிக்கை இல்லாததால், வளரும் நாடுகள் எதிர்காலத்தில் அதிக தீவிரமான வானிலை மாற்றத்தைச் சந்திக்கும். இது மிகப்பெரிய பேரிடர் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே இதை அடிப்படையாகக் கொண்டும் இந்த கருப்பொருள் இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. 

சிறந்த திட்டமிடல் மற்றும் பேரிடர் விழிப்புணர்வு,  இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் பேரழிவுகளைத் தடுக்க வழிவகுக்கும்.  இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை, ஐ.நா. சபையின் பேரிடர் அபாயக் குறைப்பு  நிபுணர்கள், கண்டுபிடிப்பாளர்கள், பயிற்சியாளர்கள் இணைந்து உலகெங்கிலும் உள்ள அபாய நிலை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர்.

Next Story