உலக செய்திகள்

கலிபோர்னியா: அலிசால் காட்டுத்தீ - 13,400 ஏக்கர் காடுகள் நாசம் + "||" + Alisal Wildfire - 13,400 acres of forest destroyed

கலிபோர்னியா: அலிசால் காட்டுத்தீ - 13,400 ஏக்கர் காடுகள் நாசம்

கலிபோர்னியா: அலிசால் காட்டுத்தீ - 13,400 ஏக்கர் காடுகள் நாசம்
கலிபோர்னியா மாகாணம் அலிசாலில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் 13,400 ஏக்கர் காடுகள் நாசமாகின.
கலிபோர்னியா,

நேற்று முன்தினம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் அலிசால் நீர்தேக்கத்தின் அருகே  காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீயானது காற்றின் காரணமாக வேகமாகப் பரவியது. இதனால் தெற்கு சாண்டா பார்பரா கவுண்டி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. 

13,400 ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகிவிட்டதாக சாண்டா பார்பரா கவுண்டி தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். காட்டுத்தீயின் காரணமாக அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளை நெருங்கியதால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

சுமார் 600 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க வனத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. காட்டுத்தீயை கட்டுப்படுத்த தவறியதற்காக கிரீஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர்
காட்டுத்தீயை உரிய நேரத்தில் கட்டுப்படுத்த தவறியதற்காக கிரீஸ் நாட்டின் பிரதமர் அந்நாடு மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.
2. துருக்கி காட்டுத்தீயில் 8 பேர் உயிரிழப்பு; 864 பேர் காயம்
துருக்கியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்து உள்ளனர். 864 பேர் காயமடைந்து உள்ளனர்.
3. பண்ணாரி வனப்பகுதியில் காட்டுத்தீ: மரம், செடி-கொடிகள் எரிந்து நாசம்
பண்ணாரி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் மரம், செடி-கொடிகள் எரிந்து நாசம் ஆனது.