உலக செய்திகள்

ரஷியாவில் புதிதாக 28,717 பேருக்கு கொரோனா + "||" + Russia confirms 28,717 daily COVID-19 infections

ரஷியாவில் புதிதாக 28,717 பேருக்கு கொரோனா

ரஷியாவில் புதிதாக 28,717 பேருக்கு கொரோனா
ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 28,717 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

மாஸ்கோ,

ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 28717 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7861681ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 21,801 பேர் பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 6916086ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் அதிகபட்சமாக மாஸ்கோவில் 4410 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 984 பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். இதன்மூலம் இதுவரை ரஷியாவில் கொரோனாவால் 2,19,329 பேர் பலியாகியுள்ளனர்.