உலக செய்திகள்

நெமிலி அருகே ஆற்றில் மூழ்கி மாணவன் பலி + "||" + Student drowns in river

நெமிலி அருகே ஆற்றில் மூழ்கி மாணவன் பலி

நெமிலி அருகே ஆற்றில் மூழ்கி மாணவன் பலி
ஆற்றில் மூழ்கி மாணவன் பலி
நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கரியாகூடல் அருந்ததிபாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் சாரதி (வயது 14). 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்ற சாரதி தண்ணீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டான். இதனால் நண்பர்கள் கூச்சலிட்டனர். அதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஆற்றில் மூழ்கிய சாரதியை மீட்டு புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். 

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சாரதி இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேசிட் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.