உலக செய்திகள்

அமெரிக்காவில் இதுவரை 40.3 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் + "||" + Vaccines administered in US crosses 403 million so far

அமெரிக்காவில் இதுவரை 40.3 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்

அமெரிக்காவில் இதுவரை 40.3 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 85 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் மாடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 40,35,76,826 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதில் 21,74,03,897 பேர் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 18,77,14,829 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் பைசர், மாடர்னா ஆகிய நிறுவனங்களின் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை சுமார் 85 லட்சம் பேர் இதுவரை செலுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் செலுத்திய கொரோனா தடுப்பூசி 10 கோடி
பாகிஸ்தானில் கடந்த 9 மாதங்களில் 10 கோடி கொரோனா தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன.
2. இந்தியாவில் செலுத்திய மொத்த கொரோனா தடுப்பூசி 102.10 கோடி
இந்தியாவில் செலுத்திய மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 102.10 கோடி ஆகும்.
3. அமெரிக்காவில் இதுவரை 41.3 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை ஒரு கோடியே 30 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. மெகா தடுப்பூசி முகாம்: 20.05 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - சுகாதாரத்துறை தகவல்
மெகா தடுப்பூசி முகாமில் இதுவரை 20.05 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி போடாமல், சான்றிதழ் வந்ததால் வாலிபர் அதிர்ச்சி
2-வது டோஸ் தடுப்பூசி போடும் முன்பே, வாலிபருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது.அதில் இருந்த லிங்கை கிளிக் செய்த போது, வாலிபர் 2 டோஸ் தடுப்பூசியும் போட்டதற்கான சான்றிதழ் பதிவிறக்கமானது.