உலக செய்திகள்

நார்வேயில் வில் அம்புகளால் மர்ம மனிதன் தாக்குதல் - 5 பேர் பலி + "||" + Norway: Man armed with a bow and arrows kills 5 people; 37-year-old Danish citizen arrested

நார்வேயில் வில் அம்புகளால் மர்ம மனிதன் தாக்குதல் - 5 பேர் பலி

நார்வேயில் வில் அம்புகளால் மர்ம மனிதன் தாக்குதல் - 5 பேர் பலி
தாக்குதல் நடத்தியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. தாக்குதல் நடத்தியது தனிநபர்தான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஓஸ்லோ

நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ்பெர்க் நகரில் இன்று மர்ம நபர் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளார். மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் விம், அம்புடன் வந்த அந்த நபர் மக்களை நோக்கி அம்புகள் எய்தி தாக்கியுள்ளான். மேலும், துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகத்தின் பேரில் 37 வயதான டேனிஷ் நபர்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த  தாக்குதலில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். 

பிரதமர் எர்னா சோல்பெர்க் இந்த சம்பவம்  "திகிலூட்டும்" செயல் என  கூறி உள்ளார்.