ரஷ்யாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா உயிரிழப்பு


ரஷ்யாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா உயிரிழப்பு
x
தினத்தந்தி 14 Oct 2021 10:09 AM GMT (Updated: 14 Oct 2021 10:09 AM GMT)

ரஷ்யாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டு, 986 பேர் உயிரிழந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

மாஸ்கோ,


ரஷிய நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மந்தமாக உள்ளன.  அதனால், அந்நாட்டில் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது என கூறப்படுகிறது.

எனினும், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க ரஷிய அரசு தயங்கி வருகிறது.  இந்நிலையில், ரஷியாவில் கடந்த சில நாட்களாக ஒரு நாள் கொரோனா உயிரிழப்பு புதிய உச்சமடைந்துள்ளது.  அதன்படி, அந்நாட்டில் கடந்த 12ந்தேதி ஒரே நாளில் 28 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனால், அந்நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 70 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்தது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 35 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல், வைரஸ் தாக்குதலுக்கு புதிய உச்சமாக கடந்த 12ந்தேதி ஒரே நாளில் 973 பேர் உயிரிழந்தனர். ரஷியாவில் பதிவான அதிகபட்ச ஒரு நாள் கொரோனா உயிரிழப்பு இதுவாகும். இதனால், அந்நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 345 ஆக அதிகரித்தது.

இந்த நிலையில், ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு மீண்டும் அதிகரித்து உள்ளது.  இதன்படி, கொரோனாவுக்கு ஒரே நாளில் 986 பேர் உயிரிழந்து உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.


Next Story