உலக செய்திகள்

வங்காளதேசத்தில் வகுப்புவாத கலவரம்; பத்திரிகையாளர் உள்பட 3 பேர் பலி + "||" + Communal riots in Bangladesh; Three people, including a journalist, were killed

வங்காளதேசத்தில் வகுப்புவாத கலவரம்; பத்திரிகையாளர் உள்பட 3 பேர் பலி

வங்காளதேசத்தில் வகுப்புவாத கலவரம்; பத்திரிகையாளர் உள்பட 3 பேர் பலி
வங்காளதேச வகுப்புவாத கலவரத்தில் பத்திரிகையாளர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டதுடன் 60 பேர் காயமடைந்து உள்ளனர்.

டாக்கா,

வங்காளதேச நாட்டில் துர்கா பூஜை சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.  இந்த நிலையில், முஸ்லிம்கள் பெருமளவில் வசிக்கும் அந்நாட்டில் சமீபத்தில் வீடியோ ஒன்று வைரலானது.

இதன் தொடர்ச்சியாக திகிர்பார் என்ற இடத்தில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் ஒன்று கூடி கூட்டம் ஒன்றை நடத்தின.  இந்த சூழலில், கும்பல் ஒன்று மண்டபம் என்ற இடத்தில் தாக்குதலில் ஈடுபட்டது.

இதில், பத்திரிகையாளர் ஒருவர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  60 பேர் காயமடைந்து உள்ளனர்.  இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து 144 தடை உத்தரவும் அந்த பகுதியில் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.