பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜீப் பள்ளத்தில் பாய்ந்தது; 5 பேர் பலி


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜீப் பள்ளத்தில் பாய்ந்தது; 5 பேர் பலி
x
தினத்தந்தி 14 Oct 2021 2:26 PM GMT (Updated: 2021-10-14T19:56:30+05:30)

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜீப் பள்ளத்தில் பாய்ந்ததில் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹாவேலி,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஹாவேலி மாவட்டத்தில் ஜீப் ஒன்று சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் பாய்ந்தது.  இதில்  அதில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர்.  4 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதுபற்றி வெளியான தகவலில், சாலையின் நடுவில் இரும்பு தடி ஒன்று நேராக நிற்க வைக்கப்பட்டு உள்ளது.  அதில் இருந்து வாகனத்தில் பயணித்தவர்களை காப்பதற்காக ஓட்டுனர் முயன்றுள்ளார்.  அதில் விபத்து ஏற்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் சிக்கியவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினை சேர்ந்தவர்கள் என்றும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.


Next Story