ஆப்கானிஸ்தானில் தொழுகையின்போது குண்டுவெடிப்பு; பலி 32 ஆக உயர்வு


ஆப்கானிஸ்தானில் தொழுகையின்போது குண்டுவெடிப்பு; பலி 32 ஆக உயர்வு
x
தினத்தந்தி 15 Oct 2021 12:26 PM GMT (Updated: 15 Oct 2021 12:29 PM GMT)

ஆப்கானிஸ்தானில் மசூதியில் தொழுகையின்போது நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் பலி 32 ஆக உயர்வடைந்து உள்ளது.

கந்தஹார்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் கந்தஹார் நகரில் அமைந்த மசூதியில் வழக்கம்போல் இன்று வெள்ளி கிழமை தொழுகை நடந்தது.  ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கான இந்த மசூதியில் திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 16 பேர் பலியாகி உள்ளனர்.  40 பேர் காயமடைந்து உள்ளனர் என முதல்கட்ட தகவல் வெளியானது.  அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

அந்நாட்டில் தலீபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், தொடர்ச்சியாக பொதுமக்கள் மீது தாக்குதல்கள் நடந்து வருகின்றன.  இதனை ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்தி வருகின்றனர் என கூறப்படுகிறது.  இந்நிலையில், பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்து உள்ளது.  53 பேர் காயமடைந்து உள்ளனர்.


Next Story