“இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது” - நிர்மலா சீதாராமன்


“இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது” -  நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 16 Oct 2021 12:29 AM GMT (Updated: 16 Oct 2021 12:29 AM GMT)

இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அங்கு நடைபெற்ற உலக வங்கியின் வளர்ச்சி குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

“கொரோனா பிரச்சினையையும் மீறி, கடந்த நிதியாண்டில் இந்தியாவுக்கு ரூ.6 லட்சத்து 15 ஆயிரம் கோடி அன்னிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது. இதன்மூலம் உலக முதலீட்டாளர்களிடையே முதலீட்டுக்கு உகந்த நாடு என்ற அந்தஸ்தை தக்க வைத்திருப்பது தெரிகிறது. 

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், கடந்த ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் ஜி.எஸ்.டி. வசூல் தலா ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிடைத்தது. இது, இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதற்கு சாட்சி ஆகும். வரும் மாதங்களிலும் ஜி.எஸ்.டி. வசூல் அதிகமாக இருக்கும்.”

இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

Next Story