உலக செய்திகள்

வங்காளதேசத்தில் காளி கோவிலில் 6 சிலைகள் சேதம் + "||" + 6 idols damaged in Kali temple in Bangladesh

வங்காளதேசத்தில் காளி கோவிலில் 6 சிலைகள் சேதம்

வங்காளதேசத்தில் காளி கோவிலில் 6 சிலைகள் சேதம்
வங்காளதேசத்தில் காளி கோவிலில் 6 சிலைகளை வன்முறையாளர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
டாக்கா,

வங்காளதேச நாட்டின் முன்ஷிகஞ்ச் நகரில் சிராஜ்தீகான் ஜில்லா பகுதியில் காளி கோவில் ஒன்று உள்ளது.  இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் வன்முறையாளர்கள் சிலர் புகுந்து சிலைகளை அடித்து, நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர்.

இதுபற்றி உதவி போலீஸ் சூப்பிரெண்டு ரஷீதுல் இஸ்லாம் கூறும்போது, கோவில் பாதுகாப்பின்றி உள்ளது.  சிலைகள் மட்டுமே சேதப்படுத்தப்பட்டு உள்ளன.  நுழைவு வாயிலின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளது.  இதுபற்றி புகார் பதிவு செய்ய தயாராகி வருகிறோம் என கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் வங்காளதேச நாட்டில் துர்கா பூஜை சிறப்புடன் கொண்டாடப்பட்டது.  முஸ்லிம்கள் பெருமளவில் வசிக்கும் அந்நாட்டில் சமீபத்தில் வீடியோ ஒன்று வைரலானது.

இதன் தொடர்ச்சியாக திகிர்பார் என்ற இடத்தில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் ஒன்று கூடி கூட்டம் ஒன்றை நடத்தின.  இந்த சூழலில், கும்பல் ஒன்று மண்டபம் என்ற இடத்தில் தாக்குதலில் ஈடுபட்டது.

இதில், பத்திரிகையாளர் ஒருவர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.  60 பேர் காயமடைந்தனர்.  இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து 144 தடை உத்தரவும் அந்த பகுதியில் பிறப்பிக்கப்பட்டது.  இந்த நிலையில், கோவில் சிலைகள் அடித்து, நொறுக்கப்பட்டு உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னை ரெயில் மீது மரம் விழுந்தது என்ஜின் சேதம்; 2 மணி நேரம் தாமதம்
சென்னை ரெயில் மீது மரம் விழுந்தது என்ஜின் சேதம்; 2 மணி நேரம் தாமதம்.
2. உத்திரமேரூர் ஒன்றியத்தில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையால் சேதம்
உத்திரமேரூர் ஒன்றியத்தில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையால் சேதம் அடைந்தது.
3. செம்பனார்கோவில் வட்டார பகுதியில் சூறைக்காற்றில் 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்
செம்பனார்கோவில் வட்டார பகுதியில் சூறைக்காற்றில் 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் இழப்பீடு வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.