உலக செய்திகள்

உலகின் மிகவும் விஷமுள்ள ராட்சச சிலந்தி! டுவிட்டரில் பகிர்ந்த புகைப்படக்கலைஞர் + "||" + Canada Photographer Finds One of World's Most Dangerous Spiders Under Bed

உலகின் மிகவும் விஷமுள்ள ராட்சச சிலந்தி! டுவிட்டரில் பகிர்ந்த புகைப்படக்கலைஞர்

உலகின் மிகவும் விஷமுள்ள ராட்சச சிலந்தி! டுவிட்டரில் பகிர்ந்த புகைப்படக்கலைஞர்
கனடாவின் புகைப்படக்கலைஞர் உலகின் மிகவும் விஷமுள்ள சிலந்தியை புகைப்படம் எடுத்துள்ளார்.
ஒட்டாவா,

கனடா நாட்டின்  ஒன்டாரியோவைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் கில் விசன். லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்றவர் கில் விசன். இவர்  ஈக்வடாரின் நாபோவில் தங்கியிருந்தபோது, தனது அறையில் சிறிய சிலந்திகள் ஊர்ந்து செல்வதைக் கவனித்தார். இந்த சிறிய சிலந்திகள் எங்கு செல்கிறது என்பதை கண்டறிய அவர் அந்த சிலந்திகளுக்கு பின்னால் சென்றார்.

அப்போதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது அறைக்கு அடியில் உலகின் கொடிய சிலந்திகளில் ஒன்றாக கருதப்படும் பிரேசிலிய வாண்டரிங் ஸ்பைடர் என்ற சிலந்தியை கண்டறிந்தார். அந்த கொடிய சிலந்தியை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கு முன் அதனை புகைப்படம் எடுக்க முடிவு செய்தார். 

அந்த சிலந்தி கூட்டத்தின் மிகப்பெரும் சிலந்தியை அற்புதமாக புகைப்படம் எடுத்த அவர், அந்த படத்தினை தனது டுவிட்டரில்  ‘தி ஸ்பைடர் ரூம்’ என்ற பெயரில் பகிர்ந்துகொண்டார். 

 பிரேசிலிய வான்டரிங் ஸ்பைடர் உலகின் கொடிய சிலந்திகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இவை வாழை இலைகளில் அடிக்கடி காணப்படுகின்றதால், வாழை சிலந்திகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை இரவில் உணவைத் தேடி காடுகளில் சுற்றித் திரியும். இவற்றின் இரையானது சிறிய பூச்சிகள் முதல் தவளைகள் வரை இருக்கும். இதன் விஷம் மனிதர்கள் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது.

Related Tags :