உலக செய்திகள்

தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு: உலக வங்கி பாராட்டு + "||" + World Bank Chief Lauds India's Successful COVID-19 Vaccination Campaign

தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு: உலக வங்கி பாராட்டு

தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு: உலக வங்கி பாராட்டு
கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோகத்தில் சர்வதேச அளவில் பங்காற்றிய இந்தியாவுக்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.
வாஷிங்டன், 

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அமெரிக்கா சென்றுள்ளார். அவர் வாஷிங்டனில் உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ்சை நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் பருவநிலை மாற்ற பிரச்சினையில் இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.

இந்தியாவில் செயல்படுத்தி வரும் கொரோனா தடுப்பூசி திட்டத்துக்காக நிர்மலா சீதாராமனிடம் உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ் பாராட்டு தெரிவித்தார். தடுப்பூசி உற்பத்தியிலும், வினியோகத்திலும் இந்தியாவின் சர்வதேச பங்களிப்புக்கு அவர் நன்றியும் தெரிவித்துக்கொண்டார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நாடான இந்தியா, கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா சமீபத்தில் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சீக்கிய புனித தளத்தில் பாகிஸ்தான் அழகி போட்டோ சூட்...இந்தியா அதிருப்தி
பாகிஸ்தான் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பின் முன்பு பாகிஸ்தான் மாடல் சவுலேஹா போட்டோசூட் நடத்தி, அதன் படங்களை வெளியிட்டிருந்தார்
2. ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை : நடுவர் மற்றும் மருத்துவ குழுவில் இந்திய அதிகாரிகள்...!
இந்தியாவின் சோனியா பத்லா இந்த உலக கோப்பை தொடரில் தொழில்நுட்ப அதிகாரியாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3. உறுப்பு தானம் கிடைக்காததால் இந்தியாவில் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் உயிரிழப்பு
அறுவை சிகிச்சைக்கு தேவையான உடல் உறுப்புகள் கிடைக்காததால் இந்தியாவில் ஆண்டு தோறும் 5 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
4. கான்பூர் டெஸ்ட்: மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 2-ம் இன்னிங்ஸ்சில் 14 ரன்கள் சேர்ப்பு
மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 2-ம் இன்னிங்ஸ்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்துள்ளது.
5. நிதி ஆயோக் வெளியிட்ட இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் பட்டியல்: பீகார் முதலிடம்
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் பட்டியலில் பீகார் முதலிடத்தில் உள்ளது.