உலக செய்திகள்

கோவாக்சின் தடுப்பூசிக்கு ஐ.நா.சபையின் ஒப்புதல் கிடைக்குமா..? + "||" + covaxin approval-WHO technical advisory group to decide on 26 october

கோவாக்சின் தடுப்பூசிக்கு ஐ.நா.சபையின் ஒப்புதல் கிடைக்குமா..?

கோவாக்சின் தடுப்பூசிக்கு ஐ.நா.சபையின் ஒப்புதல் கிடைக்குமா..?
கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக ஐ.நா சபையின் ஆலோசனை குழு அக்டோபர் 26ம் தேதி கூடுகிறது.
சுவிட்சர்லாந்து,

கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்குவது தொடர்பாக  ஐ.நா சபையின் ஆலோசனை குழு  அக்டோபர் 26ம் தேதி கூடுகிறது.

இதுகுறித்து ஐ.நா சபையின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறியதாவது, “ஐ.நா சபை கோவாக்சின் தடுப்பூசியுடன்  மிக நெருக்கமாக பயணித்து வருகிறது. எங்கள் நோக்கம் அதிகமான தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்குவது. அதன்மூலம், அதிக மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க செய்ய முடியும்” என்று கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 27ம் தேதி கோவாக்சின் தரப்பில்  கூடுதல் தரவுகள் அளிக்கப்பட்டது.ஐ.நா சபையின் நிபுணர்கள் அவற்றை ஆராய்ந்து வருகின்றனர்.அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் அதில் விடைகள் இருப்பின் அடுத்த வாரம் இறுதி முடிவு கிடைக்கும் என்று ஐ.நா சபையின் டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

விரைவில் இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கிடைக்கும் என்பது இதன்மூலம் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 11-வது மெகா முகாம்: 12 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் நடைபெற்ற 11-வது மெகா தடுப்பூசி முகாமில் 12 லட்சத்து 1,832 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சென்னையில் 1 லட்சம் பேர் போட்டுக்கொண்டனர்.
2. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால், மதுபானத்துக்கு 10 சதவீதம் தள்ளுபடி..!
மத்தியபிரதேச மாநிலம் மந்த்சவுர் மாவட்டத்தில் இருக்கும் சாராய கடைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 10 சதவீதம் தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3. நியூசிலாந்துக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு பயணிகள் நியூசிலாந்துக்குள் நுழையலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
4. இங்கிலாந்தில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இன்று முதல் பயண அனுமதி...!!
இங்கிலாந்தில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இன்று முதல் பயண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
5. இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி குடும்பத்தினர் அதிர்ச்சி
காஞ்சீபுரத்தில் உயிரிழந்தவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்ததையடுத்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.