உலக செய்திகள்

அமெரிக்காவில் இதுவரை 40.8 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் + "||" + Reports that 408 million corona vaccines administered in US so far

அமெரிக்காவில் இதுவரை 40.8 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்

அமெரிக்காவில் இதுவரை 40.8 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை ஒரு கோடியே 50 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் மாடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 40,82,65,959 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதில் 21,88,05,579 பேர் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 18,91,41,481 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் பைசர், மாடர்னா ஆகிய நிறுவனங்களின் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை சுமார் ஒரு கோடியே 50 லட்சம் பேர் இதுவரை செலுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்கா: அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி
அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
2. 11-வது மெகா முகாம்: 12 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் நடைபெற்ற 11-வது மெகா தடுப்பூசி முகாமில் 12 லட்சத்து 1,832 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சென்னையில் 1 லட்சம் பேர் போட்டுக்கொண்டனர்.
3. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால், மதுபானத்துக்கு 10 சதவீதம் தள்ளுபடி..!
மத்தியபிரதேச மாநிலம் மந்த்சவுர் மாவட்டத்தில் இருக்கும் சாராய கடைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 10 சதவீதம் தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4. நியூசிலாந்துக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு பயணிகள் நியூசிலாந்துக்குள் நுழையலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
5. அமெரிக்கா தலைமையில் 'ஜனநாயக உச்சி மாநாடு’ - சீனா, ரஷியாவுக்கு அழைப்பில்லை...
அமெரிக்கா தலைமையில் நடைபெற உள்ள ஜனநாயக உச்சி மாநாட்டில் பங்கேற்க தைவானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.