உலக செய்திகள்

அத்தையை சென்று பார்க்கலாமா... அதிகாரியிடம் அனுமதி கேட்ட சுட்டி சிறுமி - விமான நிலையத்தில் சுவாரஷ்ய சம்பவம்! + "||" + Little girl asks permission to hug aunt at airport, wins the internet - WATCH viral video

அத்தையை சென்று பார்க்கலாமா... அதிகாரியிடம் அனுமதி கேட்ட சுட்டி சிறுமி - விமான நிலையத்தில் சுவாரஷ்ய சம்பவம்!

அத்தையை சென்று பார்க்கலாமா... அதிகாரியிடம் அனுமதி கேட்ட சுட்டி சிறுமி - விமான நிலையத்தில் சுவாரஷ்ய சம்பவம்!
கத்தாரில் உள்ள ஹமத் விமானநிலையத்தில் சிறுமி ஒருவர் தனது அத்தையை வழி அனுப்பி வைக்க வந்திருக்கிறார்.
துபாய்,

கத்தாரில் உள்ள ஹமத் விமானநிலையத்தில் சிறுமி ஒருவர் தனது அத்தையை வழி அனுப்பி வைக்க வந்திருக்கிறார். அவரது அத்தை தனது விமானம் புறப்படும் நேரத்திற்கு முன்பாக காத்திருப்பு அறைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் தனது அத்தையை பிரிய மனம் இல்லாத அச்சிறுமி, கடைசியாக ஒரு முறை பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார்.

அப்போது அங்கிருக்கும் பாதுகாப்பு அதிகாரியிடம் அச்சிறுமி அத்தையை சென்று பார்க்கலாமா என்று அனுமதி கேட்கிறார். பாதுகாப்பு அதிகாரி அனுமதியளிக்கவே அச்சிறுமி தனது அத்தை நோக்கிச் சென்று கட்டியணைக்கிறார். 

இந்த வீடியோவை பார்க்கும்போது நமது மனம் உருகிவிடும் அளவிற்கு மனம் நெகிழ்ச்சியாக இருப்பதாக சமூகதளவாசிகள் கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர். 

இந்த வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது. கோடிக் கணக்கில் லைக்குகளும் ஷேர்களும் குவிந்து வருகிறது.