உலக செய்திகள்

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொரோனாவுக்கு பலி + "||" + Colin Powell, First Black US Secretary Of State, Dies Of Covid

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொரோனாவுக்கு பலி

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொரோனாவுக்கு பலி
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொலின் பவுல் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தார்.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் 65-வது வெளியுறவுத்துறை மந்திரியாக செயல்பட்டவர் கொலின் பவுல். ஆப்பிரிக்க-அமெரிக்கரான இவர் 2001 முதல் 2005 வரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றியுள்ளார். இவர் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த காலத்தில் தான் ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தது. கொலின் பவுல் அமெரிக்கா முப்படைகளின் தலைமை தளபதியாகவும் செயல்பட்டுள்ளார். 

84 வயதான கொலின் பவுல் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டுள்ளார். 
 
இதற்கிடையில், கொலின் பவுலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கொலின் பவுல் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொலின் பவுல் உயிரிழந்த நிகழ்வுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை...!
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2. அமெரிக்காவில் இதுவரை 47 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 4.6 கோடி பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. ஒரே வீடியோ கால்... 900 பேர் வேலை காலி ; இந்திய தொழிலதிபரின் செயல்...!
250 பேருக்கு மேல் 8 மணி நேர வேலைக்கான சம்பளம் வாங்கிக்கொண்டு 2 மணி நேரம் மட்டுமே வேலை பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்
4. அமெரிக்காவில் 11 மாகாணங்களில் “ஒமைக்ரான்” கொரோனா பரவல்
அமெரிக்காவில் குறைந்தபட்சம் 11 மாகாணங்களில் ஒமைக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. அமெரிக்காவில் நிதி பற்றாகுறையில் தவிக்கும் பாகிஸ்தான் தூதரகம்
அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் கடுமையான நிதி பற்றாகுறையில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.