உலக செய்திகள்

நைஜீரியாவில் மர்ம மனிதர்கள் துப்பாக்கி சூடு: 43 பேர் பலி + "||" + Humans shooting in Nigeria: 43 killed

நைஜீரியாவில் மர்ம மனிதர்கள் துப்பாக்கி சூடு: 43 பேர் பலி

நைஜீரியாவில் மர்ம மனிதர்கள் துப்பாக்கி சூடு: 43 பேர் பலி
நைஜீரியாவில் உள்ள சகோடா மாகாணத்தில் இன்று அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 43 பேர் உயிரிழந்தனர்.
சகோடா,

நைஜீரிய நாட்டில் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களும் ஆள் கடத்தலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று சகோடா மாகாணத்தில் உள்ள கொரன்யா கிராமத்தில் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அங்கு கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 43 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அம்மாகாண அரசு தெரிவித்து உள்ளது.

ஏற்கெனவே நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் சந்தைப் பகுதியை அடித்து நொறுக்கியதுடன் 30 பேரை சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. சக வீரரின் காதலை ஏற்ற பெண் ராணுவ வீராங்கனை கைது
சக வீரரின் காதலை ஏற்ற பெண் ராணுவ வீராங்கனை கைது செய்யப்பட்டுள்ளார்.
2. நைஜீரியா: கிராம மக்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் - 10 பேர் பலி
நைஜீரியாவில் கிராம மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.
3. நைஜீரியா: நின்றுகொண்டிருந்த ஆட்டோக்கள் மீது டேங்கர் லாரி மோதல் - 6 பேர் பலி
நைஜீரியாவில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஆட்டோக்கள் மீது தண்ணீரை ஏற்றிவந்த டேங்கர் லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
4. நைஜீரியா: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு
நைஜீரியாவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
5. நைஜீரியா: மதவழிபாட்டு தளத்தில் துப்பாக்கிச்சூடு - 18 பேர் பலி
நைஜீரியாவில் மதவழிபாட்டு தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் உயிரிழந்தனர்.