குழந்தைகளின் தவறான நடத்தைக்கு பெற்றோருக்கு தண்டனை- சீனா திட்டம்


குழந்தைகளின் தவறான  நடத்தைக்கு பெற்றோருக்கு தண்டனை- சீனா திட்டம்
x
தினத்தந்தி 19 Oct 2021 11:30 AM GMT (Updated: 19 Oct 2021 11:30 AM GMT)

குழந்தைகளின் தவறான நடத்தை அல்லது குற்ற செயல்களுக்கு பெற்றோருக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வர சீன நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது.

பெய்ஜிங்,

குழந்தைகளின் தவறான நடத்தை அல்லது குற்ற செயல்களுக்கு  பெற்றோருக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு  வர சீன நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது. சீனாவில் குடும்பக் கல்வி ஊக்குவிப்புச் சட்டம் என்ற வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. 

அதில், குழந்தைகளின் தவறான நடத்தைகளுக்கு பெற்றோரை பொறுப்பாக்குவதுடன் குழந்தை வளர்ப்பு பற்றிய வகுப்புகளுக்கும் அவர்கள் அனுப்பி வைக்கப்படுவர். பெற்றோர் மட்டுமல்லாமல் குழந்தைகளின் பாதுகாவலருக்கும் இச்சட்டம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற நிலைக்குழு இந்த சட்ட முன்வடிவை ஆய்வுசெய்ய உள்ளது.பெற்றோர் குழந்தைகளிடம் நேரத்தை செலவிட வேண்டும், விளையாட வேண்டும், உடற்பயிற்சி செய்தல் உள்ளிட்ட நற்செயல்களில் ஈடுபட வேண்டும் என்றும் இந்த சட்டம் பரிந்துரைக்கிறது. 

வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே  ஆன்லைன் விளையாட்டுக்களை சிறுவர்கள் விளையாட வேண்டும் என்று சமீபத்தில்தான் சீன கல்வித்துறை அமைச்சகம் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. அதேபோல், வீட்டுப்பாடங்கள் மற்றும் வார இறுதி நாட்கள், விடுமுறை தினங்களில் பள்ளி முடிந்த பிறகான பயிற்சி வகுப்புகள் நடத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மாணவர்களின் கல்விச்சுமையை குறைக்கும் வகையில் சீன அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்திருந்தது. 

Next Story