நிரவ் மோடி கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்க நீதிமன்றம்


நிரவ் மோடி கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்க நீதிமன்றம்
x
தினத்தந்தி 19 Oct 2021 3:42 PM GMT (Updated: 19 Oct 2021 3:42 PM GMT)

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனுக்கு தப்பிச் சென்றார்.

வாஷிங்டன்,

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்துவதற்கான முயற்சிகள் இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
இதற்கிடையே, தன் மீதான மோசடி புகார்களை ரத்து செய்யக் கோரி, நிரவ் மோடி தொடர்ந்த வழக்கை, அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

அமெரிக்காவின் மூன்று கார்பரேட் நிறுவனங்கள் சார்பாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட டிரஸ்டியான ரிச்சரு லெவின் நீரவ் மோடி மீது மோசடி புகாரை அளித்தார். மோசடி குற்றச்சாட்டுகள் கூறியதை எதிர்த்து, நிரவ் மோடி உள்ளிட்ட மூவரும் நியூயார்க் வங்கி திவால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்து, மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Next Story