உலக செய்திகள்

தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு நிலம், பணம் வழங்கப்படும் - தலீபான் + "||" + Taliban promise cash, land, to families of suicide bombers

தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு நிலம், பணம் வழங்கப்படும் - தலீபான்

தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு நிலம், பணம் வழங்கப்படும் - தலீபான்
தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு நிலம், பணம் வழங்கப்படும் என்று தலீபான்கள் உறுதியளித்துள்ளனர்.
காபூல், 

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் முந்தைய ஆட்சி நடைபெற்ற போது தலீபான்கள் தற்கொலைப்படை தாக்குதலை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வந்தனர். 

முந்தை ஆட்சியில் ஆப்கானிஸ்தான் அரசுப்படையினர் மற்றும் அமெரிக்க படையினரை குறிவைத்து தலீபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதல்களில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை தற்போது தலீபான்களின் ஆட்சிக்கு எதிராக ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அரசுப்படைகள் மற்றும் அமெரிக்க படையினருக்கு எதிராக தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு நிலம் மற்றும் பணம் வழங்கப்படும் என்று தலீபான்கள் உறுதியளித்துள்ளனர். மேலும், தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர்களை தியாகிகள் என ஆப்கானிஸ்தான் தலீபான்கள் அரசின் உள்துறை மந்திரி சிராஜிதுன் ஹக்னி கூறியதாக உள்துறை மந்திரியின் செய்தித்தொடர்பாளர் சையது கோஷ்லி தெரிவித்துள்ளார். 

காபூலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டு உயிரிழந்த பயங்கரவாதிகளின் குடும்பத்திற்கு உள்துறை மந்திரி சிராஜிதுன் ஹக்னி பணம், நிலம் வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தான்: பெண்களை கட்டாய திருமணம் செய்ய தடை - தலீபான்கள் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் பெண்களை கட்டாய திருமணம் செய்ய தலீபான்கள் அமைப்பு தடை விதித்துள்ளது.
2. ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் 4.3 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இன்று ரிக்டர் 4.3 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. புகழ்பெற்ற பச்சைக் கண்கள் ஆப்கான் அகதி பெண் இத்தாலியில் தஞ்சம்
ஷர்பத் குல்லா 1984 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அகதிப் பெண்ணாக சர்வதேசப் புகழ் பெற்றார்.
4. ஆப்கானிஸ்தான்: தலீபான்களின் 100 நாட்கள் ஆட்சி எப்படி உள்ளது...?
அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு, வேலையில்லாத் திண்டாட்டத்தால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
5. ஆப்கானிஸ்தானில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் சரண்
ஆப்கானிஸ்தானில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைந்தனர்.