உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசியால் பிற வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு - அமெரிக்க ஆய்வு முடிவு + "||" + Protection against other viruses by the corona vaccine - US study results

கொரோனா தடுப்பூசியால் பிற வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு - அமெரிக்க ஆய்வு முடிவு

கொரோனா தடுப்பூசியால் பிற வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு - அமெரிக்க ஆய்வு முடிவு
கொரோனா தடுப்பூசியால் பிற வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும் என அமெரிக்க ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் பற்றி அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழக பீன்பெர்க் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘ஜர்னல் ஆப் கிளினிக்கல் இன்வெஸ்டிகேசன்’ என்ற பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்வில், கொரோனா வைரசுக்கு எதிரான கோவிட்-19 தடுப்பூசிகள், அதே போன்ற பிற கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் பாதுகாப்பு அளிக்கும் என தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ்கள் என்னும்போது, அது சார்பெகோ வைரஸ் அடங்கிய சார்ஸ் கோவ்-1, சார்ஸ், சார்ஸ் கோவ்-2 ஆகிய 3 வைரஸ்களை குறிக்கிறது.

கோவிட்-19 தடுப்பூசி தற்போது கோவிட் -19 தொற்றை உருவாக்குகிற சார்ஸ்கோவ்-2 வைரசுடன் பிற வைரஸ்களையும் தடுக்கிறதாம். மேலும் சாதாரண ஜலதோஷத்தை ஏற்படுத்துகிற எச்கோவ்-ஆக்43 மற்றும் எச்கேயு-1 வைரஸ்களில் இருந்தும் கோவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கிறதாம். இந்த வைரஸ்களுக்கு எதிராக கோவிட்-19 தடுப்பூசி எவ்வளவு காலம் பாதுகாப்பு அளிக்கும் என்பதை தற்போது ஆராய்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர் பாப்லோ பெனாலோஸாமெக்மாஸ்டர் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அனைத்து பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் நடவடிக்கை
தொழில்நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் நடவடிக்கை என கலெக்டர் கூறினார்.
2. ஒரே நாளில் 33,311 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஒரே நாளில் 33,311 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
3. ஒரே நாளில் 33,311 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஒரே நாளில் 33,311 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
4. கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்தது
மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்தது.
5. கரூரில் ஒரேநாளில் 31 ஆயிரத்து 869 பேருக்கு கொரோனா தடுப்பூசி
கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 31 ஆயிரத்து 869 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.