செல்போனை விழுங்கி 6 மாதங்கள் வயிற்றுக்குள் வைத்திருந்த கைதி


செல்போனை விழுங்கி 6 மாதங்கள் வயிற்றுக்குள் வைத்திருந்த கைதி
x
தினத்தந்தி 20 Oct 2021 1:41 PM GMT (Updated: 20 Oct 2021 1:41 PM GMT)

செல்போனை விழுங்கி வயிற்றுக்குள் 6 மாதங்கள் வைத்திருந்த கைதிக்கு அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உயிரைக் காப்பாற்றினர் மருத்துவர்கள்.

கெய்ரோ,

தெற்கு எகிப்தில் உள்ள அஸ்வான் பல்கலைக்கழக மருத்துவமனையில் உள்ள எகிப்திய மருத்துவக் குழு ஆறு மாதங்களுக்கு முன்பு செல்போனை விழுங்கிய கைதியின் வயிற்றில் இருந்து அகற்றி உயிரைக் காப்பாற்றினர்.

ஆறு மாதங்களுக்கு முன்பு செல்போனை விழுங்கியிருக்கிறார். அவரது உடல் உணவை ஏற்றுக்கொள்வதை செல்போன் தடுத்துள்ளது. இதனால் வயிறு மற்றும் குடலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டிருப்பதாக சோதனைகள் மற்றும் ஸ்கேன் காட்டின. அவரது உயிரைக் காப்பாற்ற உடனடி அறுவை சிகிச்சை மேற்கொண்டு மருத்துவர்கள் செல்போனை வயிற்றில் இருந்து அகற்றினர்.

அவர் செல்போன்களை விழுங்குவதாகவும் பின்னர் சிறையில் மலம் கழிப்பதாகவும் பல முறை செய்திருக்கிறார். இந்த முறை, அவரால் அதை அகற்ற முடியவில்லை, ஏனெனில் அது ஒரு பிளாஸ்டிக் பையில் மூடப்பட்டிருந்தது, இது செரிமானத்தை தடுத்து அவரது ஆரோக்கியத்தை பாதித்துள்ளது. மருத்துவ குழுவினர் செல்போனை போலீசில் கொடுத்ததாக தெரிவித்தனர்.


Next Story