நேபாளத்தில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 48 பேர் பலி


நேபாளத்தில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 48 பேர் பலி
x
தினத்தந்தி 20 Oct 2021 4:23 PM GMT (Updated: 20 Oct 2021 4:23 PM GMT)

நேபாளத்தில் மோசமான வானிலை காரணமாக உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

காத்மாண்டு,

இந்தியாவில் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த இடைவிடாத மழையால் நேபாளத்தின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மேலும் ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 48- பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 31- பேரைக் காணவில்லை.

நேபாளத்தில் அடுத்த சில நாட்களுக்கு பரவலாக கனமழை வாய்ப்புள்ளதாகவும், கிழக்குப் பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் காத்மாண்டு வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. 

கனமழையால் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டிருந்த நெல் வயல்கள் நீரில் மூழ்கி விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளன. மோசமான வானிலை காரணமாக உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Next Story