உலக செய்திகள்

கடலில் மூழ்கி பலியான தமிழக மீனவரின் உடல் மீட்பு: இலங்கை கடற்படை உறுதி + "||" + Tamil Nadu fisherman's body rescued after drowning: Sri Lanka Navy confirms

கடலில் மூழ்கி பலியான தமிழக மீனவரின் உடல் மீட்பு: இலங்கை கடற்படை உறுதி

கடலில் மூழ்கி பலியான தமிழக மீனவரின் உடல் மீட்பு: இலங்கை கடற்படை உறுதி
கப்பலால் மோதி படகு மூழ்கடித்த சம்பவத்தில், கடலில் மூழ்கி பலியான தமிழக மீனவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கொழும்பு, 

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ராஜ்கிரண் (வயது 30), சுகந்தன் (23), சேவியர் (32) ஆகிய 3 மீனவர்கள் கடந்த 18-ந்தேதி இரவில் வங்ககடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களது படகை கப்பலைக்கொண்டு மோதி மூழ்கடித்தனர்.

இதனால் கடலில் விழுந்து தத்தளித்த மீனவர்கள் 3 பேரில் சுகந்தன், சேவியர் இருவரையும் இலங்கை கடற்படையினர் மீட்டனர். அவர்களை சிறைப்பிடித்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் ராஜ்கிரண் மட்டும் மாயமானார். இந்த நிலையில் கடலில் மூழ்கி பலியான மீனவர் ராஜ்கிரணின் உடலை மீட்டதாக இலங்கை கடற்படை நேற்று செய்தி வெளியிட்டது. அதேநேரம் இது குறித்து கூடுதல் விவரம் எதுவும் இலங்கை கடற்படை வெளியிடவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. மழையால் வீடுகளின் சுவர் இடிந்து குழந்தை உள்பட 3 பெண்கள் பலி
மழையால் வீடுகளின் சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தை உள்பட 3 பெண்கள் உயிரிழந்தனர்.
2. ஜெர்மனியில் கொரோனா பலி 1 லட்சத்தை தாண்டியது..!
ஜெர்மனியில் கொரோனா பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி உள்ளது.
3. கொரோனாவால் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு: ராகுல்காந்தி வலியுறுத்தல்
கொரோனாவால் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.
4. சேலத்தில் பயங்கர விபத்து கியாஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி 6 வீடுகள் தரைமட்டம்
சேலத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீயணைப்பு நிலைய அதிகாரி உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். 6 வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.
5. வேளச்சேரியில் ஆம்னி பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி
ஆம்னி பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் வேளச்சேரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.