வங்காளதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்: அமெரிக்கா கண்டனம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Oct 2021 11:38 PM GMT (Updated: 20 Oct 2021 11:38 PM GMT)

வங்காளதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

டாக்கா, 

வங்காளதேசத்தில் சிறுபான்மை இன மக்களாக இருக்கும் இந்துக்கள் மீது சமீப நாட்களாக தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சமூக வலைதளத்தில் பரவிய வதந்தி காரணமாக கடந்த 13-ந்தேதி குமிலா என்ற இடத்தில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது. அதன் தொடர்ச்சியாக இந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள இந்துகோவில்கள் மற்றும் இந்துக்களின் வீடுகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.

இந்நிலையில் வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் இந்து கோவில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அமெரிக்க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில் ‘‘வங்களாதேசத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்களின் போது இந்துக்கள் மற்றும் இந்து கோவில்கள் மீது நடத்தபட்ட தாக்குதல்களை நாங்கள் கண்டிக்கிறோம். அதிகாரிகளை முழுமையாக விசாரிக்க நாங்கள் வலியுறுத்துவதால் எங்கள் எண்ணங்கள் முழுவதும் இந்து சமூகத்துடன் உள்ளது. மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் ஒரு மனித உரிமை’’ என கூறினார்.

Next Story