உலக செய்திகள்

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 38 பேர் சுட்டு கொலை + "||" + 38 Houthi rebels shot dead in Yemen

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 38 பேர் சுட்டு கொலை

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 38 பேர் சுட்டு கொலை
ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 38 பேர் ராணுவ படையினரால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
சனா,

ஏமன் நாட்டின் மாரிப் மாகாணத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே இன்று காலை கடுமையான துப்பாக்கி சண்டை நடந்துள்ளது.

இதில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 38 பேர் ராணுவ படையினரால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.  இதுதவிர, ஆயுதங்கள் ஏந்திய வாகனங்களும் அழிக்கப்பட்டு உள்ளன.  10 வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர்.