உலக செய்திகள்

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டியது + "||" + Covid: UK cases top 50,000 for first time in three months

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டியது

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டியது
இங்கிலாந்தில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவாக ஒரேநாளில் 50,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
லண்டன்,

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52,009 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 86,41,221 ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 115 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 39 ஆயிரத்து 146 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 28,875 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 70 லட்சத்து 57 ஆயிரத்து 586 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 14,44,489 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. உலகின் புதிய குடியரசு நாடாக மாறிய பார்படாஸ்.. பிரிட்டிஷ் அரசாட்சிக்கு முற்றுப்புள்ளி!
பிரிட்டிஷ் அரசாட்சியின் கீழ் அதிகார மையத்தின் தலைமை பொறுப்பு செயல்பட்டு வந்த நிலையில், தற்போது சுய அதிகாரம் பெற்ற தனி குடியரசு நாடாக மாறி உள்ளது பார்படாஸ் தீவு.
2. இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலியிலும் பரவியது ‘ஒமிக்ரான்’ வைரஸ்..!
இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி என புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பரவத்தொடங்கி உள்ளது.
3. பேருந்து பயணம்,கடைகளுக்கு செல்லும் போது மாஸ்க் கட்டாயம்; இங்கிலாந்து அறிவிப்பு
இங்கிலாந்தில் பேருந்து பயணம், கடைகளுக்கு செல்லும் போது மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு
4. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது..!!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47,240 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இங்கிலாந்தில் மேலும் 43,676 பேருக்கு கொரோனா பாதிப்பு...!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,676 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.