ஸ்பெயினில் எரிமலை சீற்றம் - மக்கள் வெளியேற்றம்


ஸ்பெயினில் எரிமலை சீற்றம் - மக்கள் வெளியேற்றம்
x
தினத்தந்தி 21 Oct 2021 6:38 PM GMT (Updated: 21 Oct 2021 6:38 PM GMT)

ஸ்பெயின் நாட்டில் எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது.

மாட்ரிட்,

ஸ்பெயின் நாட்டின் கனேரி தீவுக்கூட்டத்தில் உள்ள லே பல்மா தீவில் கும்ரி விய்ஜா என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலையில் கடந்த 19-ம் தேதி முதல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டுக்கு பின்னர் கும்ரி விய்ஜா எரிமலையில் ஏற்படும் முதல் சீற்றம் இதுவாகும். 

எரிமலை சீற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் நேற்று முந்தினம் லே பல்மா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் எரிமலை சீற்றத்தை அதிகப்படுத்தியது. இதனால், எரிமலை குழம்பு வெளியேறி மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. இதனால், சுமார் 6 ஆயிரம் பேர் மீட்புப்படையினரால் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். 

ஆனாலும், இந்த எரிமலை சீற்றத்தால் சுமார் 1,800 வீடுகள் தீக்கிரையானது. எரிமலை குழம்பு இன்று அட்லாண்டிக் கடலை அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிமலை சீற்றத்தை மீட்புக்குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Next Story