உலக செய்திகள்

ஒரே பிரசவத்தில் 3 பெண், 3 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த பெண்! + "||" + Sextuplets born for the first time in Sri Lanka

ஒரே பிரசவத்தில் 3 பெண், 3 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!

ஒரே பிரசவத்தில்  3 பெண், 3 ஆண்  குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!
முதல் முறையாக ஒரே பிரசவத்தில் பெண் ஒருவர் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
கொழும்பு,

இலங்கையில் ஒரே பிரசவத்தில் பெண் ஒருவர் 6 குழந்தைகள் பெற்றெடுத்துள்ளார். இதில் 3 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகளாகும். இப்படி ஒரு பிரசவசம், இலங்கை மருத்துவ வரலாற்றில் முதல்முறையாக நிகழ்ந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.

கொழும்பிலுள்ள 'நைன்வெல்ஸ்' என்ற தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம், பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான பெண் ஒருவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்கை மூலம் இந்த குழந்தைகள் பிறந்துள்ளன.

இக்குழந்தைகளின் எடை கூடிய குழந்தை 1.6 கிலோகிராம் கொண்டது என்றும், எடை குறைந்த குழந்தை 870 கிராமுடனும் உள்ளதாகவும், தற்போது, தாயும், குழந்தைகளும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.