ரஷியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கையில் புதிய உச்சம்


ரஷியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கையில் புதிய உச்சம்
x
தினத்தந்தி 22 Oct 2021 12:29 PM GMT (Updated: 22 Oct 2021 12:29 PM GMT)

ரஷியாவை மீண்டும் கொரோனா உலுக்கத்தொடங்கியிருப்பதால், அந்நாட்டில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

மாஸ்கோ,

ரஷியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக முதன் முதலாக தடுப்பூசியை கண்டுபிடித்ததாக கூறிய ரஷியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை. கொரோனா வைரச் தொற்று மீண்டும் அதிகரிக்க இதுவும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

தொற்று பரவல் இதுவரை இல்லாத அளவுக்கு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியிருப்பதால், ரஷியாவில் ஒருவாரத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கி புதின் உத்தரவிட்டுள்ளார். தலைநகர் மாஸ்கோவில்  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  அடுத்த மாதம்  7 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ரஷியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 37,141- பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புக்கு  ஒரே நாளில்  1,064- பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ரஷியாவில் தொற்று பாதிப்புக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 28 ஆயிரத்து 453- ஆக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ரஷியாவில்தான் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 

Next Story